நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்: கார்த்தி சிதம்பரம் பேட்டி

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (19:01 IST)
நாடாளுமன்ற தேர்தலில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:
 
இந்தியா கூட்டணியின் ஒற்றுமை, வலிமையை மகளிர் உரிமை மாநாடு வெளிப்படுத்தியுள்ளது என்றும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருந்தாலும் அதனை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்றும் கூறினார்.
 
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவி என்பதால் ஒற்றுமையாக செயல்படுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியது வழக்கமான அறிவுரையே  என்று கூறிய அவர், திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்,.
 
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு  என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ள நிலையில் இதற்கு திமுகவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments