Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதியை கொலை செய்வதுதான் என் வேலையா? : பரபரக்கும் கருப்பு முருகானந்தம்

சுவாதியை கொலை செய்வதுதான் என் வேலையா? : பரபரக்கும் கருப்பு முருகானந்தம்

சுவாதியை கொலை செய்வதுதான் என் வேலையா? : பரபரக்கும் கருப்பு முருகானந்தம்
, செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (16:24 IST)
சுவாதியை எனக்கு யாரென்றே தெரியாது என்று பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சுவாதி கொலை தொடர்பாக, பேஸ்புக்கில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் தமிழச்சி என்பவர், அக்கொலைக்கு தமிழகத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் என்பவர்தான் காரணம் என்று தொடக்கம் முதலே கூறிவருகிறார். 
 
இந்து பெண்ணாகிய சுவாதி, பிலால் மாலிக் என்ற முஸ்லீம் இளைஞரை திருமணம் செய்து கொள்வதற்காக, இஸ்லாம் மதத்திற்கு மாறும் முடிவில் இருந்ததாகவும், அது பிடிக்காத கருப்பு முருகானந்தம், கூலிப்படைகளை அனுப்பி சுவாதியை கொலை செய்துவிட்டார் என்றும் அவர் கூறிவருகிறார்.
 
மேலும், சமீபத்தில் ராம்குமார் மரணம் நிகழ்ந்த பின், சுவாதியை கொலை செய்தது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மணி, அவருடைய அப்பா பெயர் இசக்கி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். அம்மா மாரி. தேவர் பேரணி மாடசாமி பிலட்டிங் காண்ரக்டரில் மணி வேலை செய்கிறார். இவர் கருப்பு முருகானந்தம் கூலிப்படைகளில் ஒருவர். இவருடைய சொந்த ஊர் முத்தூர் (சிவந்திப்பட்டி) நெல்லை மாவட்டம். 
 
சுவாதியை படுகொலை செய்தவர்களில் இவரும் இருந்தார். கொலை நடந்த பின் தன் ஊருக்கு 2 மாதங்களாக செல்லாமல் தலைமறைவாக இருந்த மணி 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதுவும் மொட்டை தலையோடு”என்று தமிழச்சி தனது முகநூலில் கூறியுள்ளார். 
 
இந்த பதிவு சுவாதியை கொலை வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், தன்மீது தமிழச்சி பொய் புகார் கூறுகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருப்பு முருகானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
 
சுவாதியை யார் என்றே எனக்கு தெரியாது. அவரது தந்தையையும் நான் பார்த்தது இல்லை. நான் சுவாதியை கொலை செய்தேன் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சுவாதியின் தந்தை விஷ்வ ஹிந்து பரிஷத்தில் இருக்கிறாரா, இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. எங்கேயோ இருந்து ஒரு பெண், முகநூலில் என்னை பற்றி தவறாக எழுதிக் கொண்டிருக்கிறார். எனக்கு இதுதான் வேலையா? மதம் மாறுகிறவர்களை எல்லாம் கொலை செய்ய வேண்டும் என்றால், நாட்டில் எத்தனை பேரைக் கொல்வது?. எனக்கும் சுவாதி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 
ஒரு பெண்ணை பொது இடத்தில் கொடூரமாக கொல்வது அதிர்ச்சியளிக்கக் கூடிய செயல். அதைக் கேள்விப்பட்டு நானும் அதிர்ச்சியடைந்தேன்.  சிறையில் ராம்குமார் மரணம் அடைந்து போனதற்கு கூட நானே காரணம் என்று கூறுவார்கள். 
 
இவ்வளவு பாதுகாப்பையும் மீறி, சிறைக்குள் ஒருவரை கொல்வது அவ்வளவு சுலபமான காரியமா? ஒரு ஆளுங்கட்சி அமைச்சரால் கூட அப்படி செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் ஒரு டவுடூடூடூடூடூ: உன் பல்லு என்ன ஒயர் கட்டரா? இல்லை கட்டிங் ப்ளேயரா?