Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு 3ஆயிரம் கன அடி தண்ணீர்.. உறுதி செய்த ஆணையம்.. மறுபரிசீலனைக்கு கர்நாடகா கோரிக்கை..

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:35 IST)
காவிரியில் 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த உத்தரவை  மறு பரிசீலனை  செய்ய கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா முறையிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்துக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு, காவிரி ஒழுங்காற்றுக்குழு அளித்த பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து  விவாதிக்கவும்,  தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு  கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments