Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடக மாநில கொடியை அகற்றிய தமிழக போலீசார்: பெரும் பரபரப்பு

கர்நாடக மாநில கொடியை அகற்றிய தமிழக போலீசார்: பெரும் பரபரப்பு
, ஞாயிறு, 5 ஜனவரி 2020 (17:31 IST)
கர்நாடக மாநிலத்தின் ஐயப்ப பக்தர்களின் வாகனம் ஒன்றில் கட்டப்பட்டு இருந்த கர்நாடக மாநில கொடியை பாதுகாப்பு காரணங்களுக்காக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே தமிழக போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது. 
 
இந்த தகவல் சமூகவலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டதோடு இரு மாநிலங்களுக்கும் இடையே மோதலை மூட்டும் வகையில் ஒருசில சர்ச்சைக்குரிய பதிவுகளும் செய்யப்பட்டன. இதனால் கன்னட அமைப்பினர் சிலர் தமிழக போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மேலும் கர்நாடக மாநில கொடியுடன் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக எல்லைக்குள் நுழைய முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து கர்நாடக மாநில எல்லையான ஓசூர் பகுதியில் கன்னட அமைப்பினரை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: 50 கோடி விலங்குகள் உயிரிழந்ததா? உண்மை என்ன? - விரிவான தகவல்கள்