Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மாதமே சசிகலா விடுதலை? பரிசீலிக்கும் சிறைத்துறை!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (16:14 IST)
விடுமுறை நாட்களை கழித்துவிட்டு சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா? என ஆலோசனை. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பாரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிக்கலா கட்டவேண்டிய அபராத தொகையான ரூ.10.10 கோடி நேற்று செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அபராத தொகையை செலுத்தி விட்டதால் சசிகலா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என பேசிக் கொள்ளப்பட்டது.   
 
ஆனால் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில், சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. ஆம், தண்டனை காலம் ஜனவரி 27 ஆம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், விடுமுறை நாட்களை கழித்துவிட்டு சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா? என்பது குறித்து சட்ட ஆலோசனையை சிறைத்துறை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை சட்ட ஆலோசனை சசிகலாவுக்கு சாதகமாக அமைந்தால், அவர் இந்த மாதத்திலேயே விடுதலை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments