Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (12:59 IST)
தமிழநாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதைத் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று கர்நாடகம் மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை நேற்று  கடிதம் எழுதியிருந்தார்

அதில், கர்நாடகம் அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இதனால், தமிழகத்திற்கு நீர் திறந்துவிடும் பட்சத்தில் கர்நாடகம் விவசாயிகள் பாதிக்கப்படுவர். தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்பதில், அரசு உறுதியாக இருக்க வேண்டுமென்று முதல்வர் சித்தராமையாவுக்கு பாஜக முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்மை கடிதம் எழுதியிருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளதாக கர்நாடகம் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: வறட்சி காலம் நிலவுவதால் இரு மாநிலங்களிடையே பிரச்சனை வேண்டாம். வேண்டிய மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், மேகதாது அணை இருந்தால், அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு, தமிழகத்தில் இப்போது தண்ணீர் வழங்கியிருக்கலாம்…. மேகதாது அணை உங்கள் நலனுக்காக கட்ட ஒப்புக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments