மதுரையில் கபாலி ஓவியம் - ரசிகர்கள் லக....லக...லக...!
மதுரையில் கபாலி ஓவியம் - ரசிகர்கள் லக....லக...லக...!
மதுரையில் வரையப்பட்டுள்ள கபாலி ஓவியம் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
இந்திய அளவில் மட்டும் அல்லாது உலக அளவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி என்ற திரைப்படம்.
ஜூலை 15 ம் தேதி அன்று கபாலியை உலகம் முழுக்க திரையிட அதன் தயாரிப்பு நிர்வாகி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கபாலி படத்தை வரவேற்கும் விதமாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினியை பெருமைபடுத்தும் விதமாகவும், மதுரை புட்டுத்தோப்பு சாலைையில் கேப்ரன்ஹால் என்ற பள்ளி அருகே ரஜினி ரசிகர்கள் சார்பில் கபாலி பட ஓவியம் மிக அழகாக வரையப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் பலரும் இந்த ஓவியத்தை பார்த்து வியக்கின்றனர். இந்த ஓவியம் பலரையும் கவர்ந்துள்ளது என்பது தான் சிறப்பு.
கபாலி பட இயக்குநர் பா.ரஞ்சித் ஓவியத்தின் மீது மிகுந்த காதல் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.