Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி தியானம் எதிரொலி: விவேகானந்தர் நினைவிடத்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

Siva
புதன், 19 ஜூன் 2024 (08:18 IST)
தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்த நிலையில் அந்த இடம் உலகப் புகழ் பெற்றதாகவும் இந்த நிகழ்வுக்கு பின்னர் உலகின் பல நாடுகளில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகில் ஜூன் 15, 16 ,17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணம் செய்ததாக தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்ரீத் மற்றும் வார விடுமுறை காரணமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்கு அதிகம் வருவதாக தகவல் வெளியானாலும் பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு மிக அதிகமாக சுற்றுலா பயணம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவதாக கன்னியாகுமரியில் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் வியாபாரமும் அமோகமாக நடப்பதாக கன்னியாகுமரியை சேர்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்தடுத்து 2 தற்கொலைகள்! தண்டவாளமா? தற்கொலை மையமா? - உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சி!

அதானி மீது அமெரிக்காவில் வழக்கு: அதானி பங்குகள் விலை கடும் சரிவு

நேற்றைய விடுமுறைக்கு பின் இன்று பங்குச்சந்தையின் நிலவரம் என்ன?

ஒருவர் மட்டுமே ஆளப் பிறக்கவில்லை.. தலித்துகளிடம் ஆட்சியை தர வேண்டும்! - வி.சி.க துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா!

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா.. விஜய் கலந்து கொள்வதால் திருமாவளவனின் அதிரடி முடிவு,..!

அடுத்த கட்டுரையில்
Show comments