Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாதம் இப்படி நடந்ததே இல்லை.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்..!

Siva
புதன், 19 ஜூன் 2024 (07:25 IST)
சென்னையில் நேற்று இரவு திடீரென மழை பெய்த நிலையில் இன்னும் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ரெட் தக்காளி நிகழ்வு நடைபெறும் என்றும் ஜூன் மாதம் எப்படி நடந்ததே இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ரெட் தக்காளி நிகழ்வு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதாவது 150 முதல் 200 மில்லி மீட்டர் மழை வரை பெய்யலாம் என்றும் குறிப்பாக தென் சென்னையில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொருத்தவரை ஜூன் மாதம் பெரிய அளவில் மழை பெய்தது இல்லை என்றும் ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் 18 நாட்களில் 10 நாட்கள் மழை பெய்துள்ளது என்றும் மழைக்காலத்தில் மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்வு ஆச்சரியமாக ஜூன் மாதத்தில் நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சென்னையில் இன்னும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments