சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் இன்று கடல் சீற்றமாக கணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கன்னியாகுமரிக்கு வருபவர்கள் மறக்காமல் செல்லும் இடம் கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை.
திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை சுற்றுலாத்துறையின் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகுகளில் இயக்கப்படுகிறது. இந்த படகு சவாரிக்காகவே அங்கு கூட்டம் அதிகமாக வரும்.
இந்நிலையில் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர்மட்டம் சரியான நிலையில் இல்லாததால் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.