குமரியில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதியா? அரசியல் பார்வையாளர்கள் கூறுவது என்ன?

Siva
வியாழன், 21 மார்ச் 2024 (20:06 IST)
இன்று வெளியாகிய பாஜக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்தது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் ஐந்து முறை போட்டியிட்டு உள்ளார் என்பதும் அதில் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆறாவது முறையாக போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு அந்த தொகுதியில் நல்ல பெயர் இருப்பதால் கண்டிப்பாக அவர் வெற்றி பெற்று விடுவார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் விஜய் வசந்த் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் நேருக்கு நேர் மோதிய நிலையில் விஜய் வசந்த் கூட்டணி காரணமாக வெற்றி பெற்றார் என்றும் ஆனால் தற்போது பாஜக கூட்டணி வலிமையாக இருப்பது மட்டுமின்றி இந்த தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விளவங்கோடு விஜய தாரணி தற்போது பாஜகவில் இருப்பதால் பொன் ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பலம் என்று கூறப்படுகிறது. 
 
கன்னியாகுமாரி தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தகுதி என்று எப்போதும் கூறப்பட்டு வருவதை அடுத்து பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி என்றும் அதே நேரத்தில் விஜய் வசந்த் தொகுதிக்கு சரியாக செய்யவில்லை என்றும் அவர் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

ஜெர்மனி சென்றுவிட்ட ராகுல் காந்தி.. ஒற்றை ஆளாக பாராளுமன்றத்தை கலக்கி வரும் பிரியங்கா காந்தி..!

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? நாடு முழுவதும் ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவு..!

ஹிஜாப் விவகாரம்.. நிதிஷ்குமார் மீது போலீசில் புகார்.. முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.11,000 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments