Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரிப்பதா? கனிமொழி கண்டனம்!

Advertiesment
தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரிப்பதா? கனிமொழி கண்டனம்!
, திங்கள், 17 ஜனவரி 2022 (15:44 IST)
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தில் உறுதிகள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது
 
குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. 
 
இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி: சிவபெருமானின் அவதாரம் என மக்கள் வழிபாடு!