கட்சியின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் கூறியதற்கு திமுக எம்.பி. கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பல வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், வருகிற டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக எம்.பி.கனிமொழி, திமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தினால் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் திமுக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், ”கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால், நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.
நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி படு தோல்வியை கண்ட நிலையில், நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கட்சி முன்னேற்றத்திற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்குமான பல திட்டங்களை அறிவித்தார் முக ஸ்டாலின். இதனை தொடர்ந்து தற்போது கனிமொழி, கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் கூறியதற்கு விளக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.