Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரற்ற சிலைக்கு ரூ.3000 கோடி, உயிருள்ள டெல்டா தமிழர்களுக்கு ரூ.350 கோடியா? கனிமொழி எம்பி ஆதங்கம்

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (22:00 IST)
கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய அரசு முதல்கட்ட நிவாரண நிதியாக சுமார் ரூ.350 கோடி அறிவித்துள்ளது. மத்திய குழுவின் அறிக்கைக்கு பின்னர் இன்னும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் முதல்கட்ட நிவாரண தொகை மிகவும் குறைந்த தொகை என தமிழக அரசியல் கட்சிகள் காட்டமாக மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, 'உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம்! என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கோவை செந்தமிழ் மாநாடு நடத்த திமுக, அரசு பணத்தை ரூ.400 கோடி செலவு செய்ததாகவும், ஆனால் கஜா புயலுக்கு திமுகவின் சார்பில் கொடுத்த தொகை எவ்வளவு என்றும், நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் திருவள்ளுவர் சிலைக்கு ஆறு கோடி ரூபாய் செலவு செய்த திமுக அரசு, கஜா புயலுக்கு மட்டும் ரூ.1 கோடி நிவாரண நிதி கொடுத்துள்ளது ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments