Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (20:26 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு டிசம்பர் 4ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் முடங்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் சற்றுமுன் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

சென்னை பூவிருந்தவல்லியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சற்றுமுன் நடந்தது. இந்த கூட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி ஜாக்டோ - ஜியோவின் வேலைநிறுத்தத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments