Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் தேசிய மொழி இதுதான்: ஸ்பெயினில் கனிமொழி சொன்ன பதில்..!

Siva
செவ்வாய், 3 ஜூன் 2025 (09:09 IST)
இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்விக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற கனிமொழி கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் விளக்குவதற்காக எம்பிக்கள் குழு பல்வேறு பிரிவுகளாக அனுப்பப்பட்ட நிலையில், திமுக எம்பி கனிமொழி தலைமையில் ஒரு குழு ஐந்து நாடுகளுக்கு சென்றது. தற்போது, இந்த குழு ஸ்பெயின் நாட்டில் இருக்கும் நிலையில், அங்கு செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
 
அப்போது, கனிமொழியிடம் இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி, “வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் எங்களுடைய தேசிய மொழி,” என்று கூறியவுடன், சில நிமிடங்கள் தொடர்ச்சியாக கைதட்டல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், "இந்தியா யாரையும் பழிவாங்க விரும்பவில்லை; நடந்த அநீதிக்கு நீதி கேட்கிறது. இந்தியாவை யாராலும் மிரட்ட முடியாது, இந்தியாவை யாராலும் அடக்க முடியாது என்பதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களது விருப்பம்" என்றும் கனிமொழி தெரிவித்தார்.
 
"இந்திய குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நமது அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
"காஷ்மீரை பாதுகாப்பான மாநிலமாக வைத்திருக்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பு. இந்தியா எப்போதும் பாதுகாப்பான நாடாகவே இருக்கும்" என்றும் அவர் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments