திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதோடு, கட்சியின் தலைவர் பதவியை யார் ஏற்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஸ்டாலின்தான் தலைவர் பதவியை ஏற்பார் என பேச்சு அடிபட்டாலும், திமுக தரப்பில் இது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட்டதாய் தெரியவில்லை. ஆகஸ்ட் 28 ஆம் தேதி, மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்படலாம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ஸ்டாலின் மற்றும் அன்பழகன் இருவரும் மட்டும் ஆலோசனை நடத்தி அவசர அவசரமாக இந்த மாதம் 28 ஆம் தேதியே கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
பொதுக்குழுவில் திமுக தலைவராக தற்போதைய செயல் தலைவர் ஸ்டாலின் பொருப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தலைவர் பதவிக்கு போட்டி ஏதுமில்லை என்றாலும், பொருளாளராக துரைமுருகனை நியமிப்பதா? அல்லது கனிமொழியை நியமிப்பதா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.