இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம் என கனிமொழி பேட்டி.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு பரபரப்பாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் திமுகவிலிருந்து விலகிய மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கபோவாதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதுகுறித்து மு.க.அழகிரி எதுவும் பேசாமலே இருந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது மதுரையில் ஆதரவாளர்களோடு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர் “ஜனவரி 3ம் தேதி எனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்த உள்ளேன். ஆலோசனைக்கு பிறகு கட்சி தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்” என கூறியுள்ளார். மேலும் “திமுகவில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன்” என கூறியுள்ளார்.
இது குறித்து தற்போது பேட்டியளித்துள்ளார் கனிமொழி, அவர் கூறியதாவது, இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். முக அழகிரி உட்பட யார் வந்து கட்சி துவங்கினாலும் அது திமுகவின் வெற்றி வாய்ப்பை பறிக்காது என தெரிவித்தார்.