பாஜக மீண்டும் வந்தால் இன்றைய இந்தியா இருக்காது.. கனிமொழி எம்பி

Mahendran
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:16 IST)
பாஜக ஆட்சிக்கு வந்தால் இன்றைய இந்தியா இருக்காது என திமுக எம்பி கனிமொழி அதிரடியாக தெரிவித்துள்ளார் 
 
தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்பி பாஜகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்தியாவில் ஒரு நல்லாட்சியை நாம் கொடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்பது இல்லாமல் போய்விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
பாஜக தொடர்ந்து மக்களை பிரித்து ஆளுகிறது என்றும் இந்துக்களை இந்து மதத்தை பாதுகாத்துக் கொண்டிருக்க கூடியவர்கள் நாங்கள் தான் என்கிறார்கள், ஆனால்  மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் இந்துக்களை பாதுகாக்கவில்லை இந்துக்களை தங்கள் அரசியலுக்கு கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கனிமொழி தெரிவித்தார் 
 
மத்தியில் தேசிய அளவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் கொடுக்கப்படுவார்கள், எனவே மோடி ராஜ்ஜியம் என்பது ஆர்எஸ்எஸ் ராஜ்ஜியமாக மாறிவிடும். தமிழ்நாட்டில் ஈ.வே ரா ராஜ்ஜியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதை இந்திய அளவில் கொண்டு வர வேண்டும் என்றும் பேசினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

இன்று இரவு வரை 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments