Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திண்டுக்கல் லியோனியின் பேச்சைக் கண்டித்த கனிமொழி!

Advertiesment
திண்டுக்கல் லியோனியின் பேச்சைக் கண்டித்த கனிமொழி!
, வெள்ளி, 26 மார்ச் 2021 (17:37 IST)
பெண்கள் உடல் குறித்து ஆபாசமாகப் பேசிய திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் பேச்சுக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவரான திண்டுக்கல் லியோனி இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக உள்ளார், கோவையில் முகாமிட்டுள்ள அவர் தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சேனாபதிக்காக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர் ‘ நாட்டு மாடுகளைக் காப்பாற்ற பாடுபடுபவர் கார்த்திகேய சேனாபதி. மாடுகளில் பல வகை உண்டு. பாரின் மாடு எல்லாம் மெஷின் வைத்துதான் பால் கறப்பார்கள். அந்த மாடு எல்லாம் ஒரு மணிநேரத்துக்கு 40 லிட்டர் பால் கறக்கும். அதைக் குடித்துவிட்டுதான் நம் பெண்கள் பலூன் மாதிரி ஆகிவிட்டார்கள். அப்போதெல்லாம் நம் பெண்களின் இடுப்பு 8 போல இருக்கும். குழந்தைகளை தூக்கிவைத்தால் அப்படியே உட்கார்ந்துகொள்ளும். ஆனால் இன்று இடுப்பு பெறுத்து பேரல் போல ஆகிவிட்டார்கள்’ என்று பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் பரவி அவருக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அஇந்நிலையில் ஆ ராசாவின் இந்த பேச்சை கனிமொழி கண்டித்துள்ளார். அவரின் சமூகவலைதளப் பக்கத்தில் ‘அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு செய்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதில் வைத்துக்கொண்டால் சமூகத்துக்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவில் இணைந்தார் அமமுக வேட்பாளர்: தினகரன் அதிர்ச்சி