Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருப்பா சொன்னது ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் சண்டன்னு? பாருங்கய்யா இந்த பாச மலர!

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (17:12 IST)
திமுக தலைவராகப்போகும் ஸ்டாலினுக்கும் அவரது தங்கை கனிமொழிக்கும் பிரச்சனை என செய்தி வெளியான நிலையில் அந்த செய்தி பொய் என நிரூபிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின்னர் வரும் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அன்று திமுக தலைவர் பதவிக்கும் பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய ஸ்டாலின், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் இன்று அளித்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். 
இதனிடையே கனிமொழி தனக்கு பொருளாளர் பதவி வழங்காததால், ஸ்டாலினுடன் சண்டையிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அதேபோல் இன்று காலை கருணாநிதியின் சமாதிக்கும் கோபாலபுரத்துக்கும் கனிமொழிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. 
 
அதனை பொய் என நிரூபிக்கும் வகையில் கனிமொழி ரக்‌ஷா பந்ததனுக்கு வாழ்த்து தெரிவித்தும், தலைவராகப் போவதற்கு வாழ்த்து தெரிவித்தும், ஸ்டாலினை கட்டிப்பிடித்து பாசமாக முத்தமளித்தார். இதனால் திமுக தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.
தலைவர் பதவிக்கு ஸ்டாலினை தவிர இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக தலைவராக அறிவிக்கப்படுவார். அதேபோல் பொருளாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாததால் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக பொருளாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments