Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியின்றி திமுகவின் தலைவராக தேர்வாகப் போகும் மு.க ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (16:47 IST)
திமுகவில் தலைவராக செயல்தலைவர் ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ் அறிவுப்பு நாளை மறுநாள் வெளியாகும். 
திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவு இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு நாடெங்கிலிருந்தும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் திமுகவின் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய ஸ்டாலின், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் இன்று அளித்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். 
இன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற்ற இந்த வேட்புமனு தாக்கலில் ஸ்டாலின், துரைமுருகனை தவிர இதுவரை தலைவர் பதவிக்கும் பொருளாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.
 
ஆகவே வரும் 28 ஆம் தேதி(செவ்வாய் கிழமை) நடக்க உள்ள திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments