Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! ரத்தாகும் வாய்ப்பு??

Mahendran
திங்கள், 29 ஜூலை 2024 (11:57 IST)
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பெரும்பாலான கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பதவி வகித்த சில மாதங்களிலேயே அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினர்.  மேலும் மேயருக்கு எதிராக உள்ள 22 கவுன்சிலர்களும், ஆதரவாக உள்ள 10 கவுன்சிலர்களும் சுற்றுலா சென்றுள்ளதாகவும், எனவே காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு  ரத்தாகும் என்று கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51  கவுன்சிலர்கள் உள்ள நிலையில் ஒரு சில திமுக கவுன்சிலர்களும் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த நிலையில், மேயர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி 33 கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் நம்பிக்கையில்லா தீர்மான மனு அளித்தனர்.

இதையடுத்து மாநகராட்சி கூட்டம் ஜூலை 29-ம் தேதி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். அன்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் 51 கவுன்சிலர்களில் 32 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் என கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments