காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தற்போதைய நிலையில் அவர்தான் ரேசில் முந்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக ஜி. செல்வம் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதும் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
எனவே மூன்று முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள செல்வம் இந்த முறை வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராஜசேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி செல்வம் மற்றும் ஜோதி வெங்கடேசன் ஆகிய இருவர் இடையே தான் என்றும் இதில் ஜி செல்வம் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.