Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் – ஜெ குரு மகன் அதிரடி!

Advertiesment
பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் – ஜெ குரு மகன் அதிரடி!
, செவ்வாய், 27 அக்டோபர் 2020 (09:54 IST)
பாமகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பாமக இருக்கும் கூட்டணியில் தங்கள் மாவீரன் மஞ்சள் படை இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

பாமகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்தனர். தொடர்ந்து அவரின் மகன் மற்றும் மனைவி ஆகியோர் பாமக தலைமையைத் தாக்கிப் பேசினர். குருவின் மணிமண்டப திறப்பு விழாவுக்கு கனலரசனை சமாதானப்படுத்தி வரவைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதையடுத்து இரு தரப்பும் சமாதானம் ஆகிவிட்டதாக நினைத்த வேளையில் இப்போது மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. விரைவில் கல்லூரிப் படிப்பை முடிக்க இருக்கும் கனலரசன், தனியாக கட்சி ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் இன்று திமுக வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சென்று சந்தித்துள்ளார். இதனால் வரும் தேர்தலில் அவர் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உதயநிதியுடனான சந்திப்பு குறித்து பேசியுள்ள கனலரசன் ‘பாமக இருக்கும் கூட்டணியில் எங்களின் மாவீரன் மஞ்சள் படை இருக்காது. குருவின் பெயரை சொல்லக் கூட பாமகவுக்கு தகுதி கிடையாது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிரியாவில் மீண்டும் தொடங்குகிறதா போர்? - ரஷ்ய வான் தாக்குதலில் 78 பேர் பலி