பெட்டி வாங்கி தாவும் பாமக; மஞ்சள் படை எடுத்த அதிரடி முடிவு! – திமுக ஹேப்பி, பாமகவுக்கு ஷாக்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (15:30 IST)
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக மறைந்த காடுவெட்டி குருவின் மகன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக கட்சியின் முக முக்கியமான தூண்களில் ஒன்றாக விளங்கியவர் காடுவெட்டி குரு. சில ஆண்டுகள் முன்பு அவர் மறைந்த நிலையில் அவரது மகன் கனலரசன் பாமகவோடு முரண்பாடி எழுந்த நிலையில் மாவீரன் மஞ்சள் படை என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினோடு பேசிய கனலரசன் இந்த சட்டமன்ற தேர்தலில் மாவீரன் மஞ்சள் படை திமுகவிற்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கனலரசன் ”மறைந்த காடுவெட்டி குரு அவர்களுக்கு நினைவு சின்னம் அமைப்பது, வன்னியர் சமுதாயத்திற்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளேன். இதுகுறித்து தலைமையோடு விவாதிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். பாமக மக்கள் நலனை தவிர்த்து பெட்டி வாங்கி கொண்டு கட்சி மாற ஆரம்பித்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments