Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனுக்கு கட்சியில் இருந்து விலகிய கமீலா நாசர் டுவிட்!

Webdunia
திங்கள், 3 மே 2021 (12:14 IST)
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக களமிறங்கியது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி என்பது தெரிந்ததே. அக்கட்சி குறைந்தது நான்கு தொகுதிகளில் வெற்றிபெறும் என ஒரு சில கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் கமல்ஹாசன் உள்பட அனைவரும் தோல்வியடைந்தனர் 
 
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் தனது வெற்றியை நூலிழையில் பறி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பிரபல நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் விலகினார்
 
அவர் கேட்ட தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் விலகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
விதைகளை தூவிக்கொண்டுதான் வருகிறீர்கள்.. அவைகள் 
ஆலவிருட்சமாய் வளர்ந்து
நிற்கும் ...
நீங்கள் நீங்களாகவே 
இருங்கள்..
மக்கள் உங்கள் அருகாமையில்...!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments