Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் இல்லாமல் தமிழக அரசியலில் எதுவும் அசையாது – மு.கருணாநிதிக்கு கமல்ஹாசன் புகழாரம்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (12:18 IST)
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதியின் பிறந்தநாளான இன்று கமல்ஹாசன் புகழ்ந்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உள்ள நிலையில் தொண்டர்கள் வீடுகளில் இருந்தபடியே கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செய்து பிறந்தநாளை எளிமையாக கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்

இந்நிலையில் மு.கருணாநிதியின் பிறந்தநாளில் பலரும் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “அறிஞர் அண்ணாவின் கொள்கையான மாநிலத் தனித்துவத்தை வடக்குவரை எதிரொலித்த ஆளுமை; தானின்றி தமிழ்நாட்டின் அரசியல் அசைவுகள் இல்லையென இறுதிவரை இருத்திக்காட்டியவர் கலைஞர் கருணாநிதி. அவர்தம் பிறந்த நாளின் அவரது உறுதிகொண்ட நெஞ்சை நினைவுகூர்வோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments