Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையில் தோன்றியே ரசிகர்களை வென்றவர்! – ரஜினிகாந்த்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (10:55 IST)
நடிகர் ரஜினிகாந்த்க்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளதற்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இந்திய திரைத்துறையில் அளித்த சிறந்த பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.” என வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வணிக சிலிண்டர் விலை உயர்வு! மாத முதல் நாளே அதிர்ச்சி!

பிண அரசியல் செய்யும் விஜய்! பாஜகவின் கருவியாகிவிட்டார்! - திருமாவளவன்!

மாதத்தின் முதல் நாளே புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! - அதிர்ச்சியில் மக்கள்!

பீகார் வாக்காளர் திருத்தம் நிறைவு! 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 31 பேர் பலி, 147 பேர் படுகாயம்.. சேத விவரங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments