Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கல் நாளில் மகிழ்ச்சியே எங்கும் நிறையட்டும்! – கமல்ஹாசன் வாழ்த்து!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 13 ஜனவரி 2022 (13:29 IST)
தமிழகத்தில் நாளை பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தை முதல் நாள் பொங்கல் விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நாளை தமிழ் மக்கள் பொங்கலை கொண்டாட உள்ளனர்.

இந்நிலையில் பொங்கலுக்காக மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ” உழவர்களுக்கு ஒரு திருநாள். நன்றியுணர்ச்சிக்கு என்றொரு நாளைக் கொண்டாடுவது தமிழரின் குணநலனைக் காட்டும். வேளாண்மையை, ஒன்றுகூடலை, உறவுபேணலை, புதுமை விருப்பத்தை முன்னிறுத்தும் பொங்கல் நாளில் மகிழ்ச்சியே எங்கும் நிறைய என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவோ வை33டி ஸ்மார்ட்போன் எப்படி? விவரம் உள்ளே!!