மானத்தை அடகுவைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது – கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (11:09 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி நடத்தப்பட்ட போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் 13 பேர் பலியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், இன்று தூத்துக்குடியில் இரங்கல் அனுசரிக்க மக்கள் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பலர் இரங்கலை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.” என்று அரசை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

மருமகனோடு மாமியார் கள்ளக்காதல்! தடுக்க முயன்ற மகள் மீது கொலை முயற்சி! - ஆந்திராவில் அதிர்ச்சி!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலயம் அரசு.. நயினார் நாகேந்திரன்

புகார் அளித்த 10 நிமிடத்தில் பதில் அளித்தார் உபேர் சி.இ.ஓ.. ஒரு இளைஞரின் வைரல் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments