அவர்கள் செய்யாததை செய்வதே எங்கள் கொள்கை - கமல்ஹாசன் அதிரடி

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (11:52 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.  

 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
 
இந்நிலையில், தற்போது மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசியல் தொடக்கம் நல்லபடியாக அமைந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கவே உங்களை அழைத்தேன் என அவர் தெரிவித்தார். மேலும், அதிமுக நடத்தும் அனைத்து கட்சிக்கு கூட்டத்திற்கு ஒருவேளை அழைப்பு விடுத்தால் அதில் கலந்து கொள்வதற்காக சென்னை செல்கிறோம். அழைக்காவிட்டாலும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது எனக் கூறினார்.
 
அதன் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கமல்ஹாசன் “நேற்று கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை பார்க்க கூடிய கூட்டம் அல்ல. எனது கட்சியில் திராவிடம் மற்றும் தேசியத்தை இழக்கவில்லை” என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments