Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை டேக் பண்ணியே ஒரு ட்வீட் போட தயார்! – கமல்ஹாசன் பதில்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (15:05 IST)
புதிய நாடாளுமன்றம் கட்டுவது தொடர்பாக பிரதமரை டேக் செய்யாமல் கமல்ஹாசன் ட்வீட் போட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில் அதுகுறித்து கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

இந்தியாவிற்கு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன் “பல மக்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் நிலையில் யாரை காப்பாற்ற புதிய நாடாளுமன்றம்? சொல்லுங்கள் பிரதமரே!” என கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் அதில் பிரதமரின் ட்விட்டர் ஐடி டேக் செய்யப்படாமல் இருந்தது.

பிரதமரை கேள்வி கேட்டு பதிவிடும்போது பிரதமர் ஐடியை சேர்க்காமல் வெறுமனே பதிவிட்டது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று மதுரையில் பிரச்சாரம் செய்ய சென்றுள்ள கமல்ஹாசனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது “நாடாளுமன்றம் தொடர்பாக பிரதமரை டேக் செய்து மீண்டும் ஒரு பதிவு போட நான் தயார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments