தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன் தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வளவு லஞ்சம் பெறப்படுகிறது என வெளியிட்டுள்ள பட்டியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தோடே தமிழக அரசில் உள்ள குறைகளையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வளவு லஞ்சம் பெறப்படுகிறது என ஒரு பட்டியலை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அதில் “பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? நான் கேட்பேன்” என பதிவிட்டுள்ளார்.
ஆனால் கமல்ஹாசன் குத்துமதிப்பாய் தொகைகளை நிரப்பி போலியாக இதை செய்திருப்பதாக ஆளும் கட்சி வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.