Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்வலியோடு பிரச்சாரம்.. கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை! – அதிர்ச்சியில் மய்யத்தார்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (10:13 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த கமல்ஹாசன் அறுவை சிகிச்சைக்கு செல்ல இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன. இந்நிலையில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள மக்கள் நீதி மய்யம் ”சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியது. மநீம தலைவர் கமல்ஹாசன் முதற் கட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் சில ஆண்டுகள் முன்னதாக காலில் அறுவைசிகிச்சை செய்து கொண்டிருந்த கமல்ஹாசன் அதன் தொடர்ச்சியாக மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாகவும், தேர்தல் பிரச்சாரம், பிக்பாஸ் போன்றவற்றால் அறுவை சிகிச்சையை ஒத்தி வைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை காரணமாக சில காலம் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் சில காலம் கமல்ஹாசன் பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் பங்கேற்காவிட்டாலும் மீண்டு வந்து புத்துணர்ச்சியுடன் தேர்தலை சந்திப்பேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments