Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 24ல் மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - கமல்ஹாசன் அதிரடி

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (13:22 IST)
நடிகர் கமல்ஹாசன் வருகிற பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துகிறார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது மையம் விசில் செயலியை அறிமுகம் செய்ய தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 16-ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தான் பிறந்த ஊரில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.  
 
வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தனது பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் அதனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும், மறைந்த முன்னள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார். 
 
அந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் “எனது ஆயுள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன். இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்தே தொடங்கும். அதற்கான எனது பயணம் அடுத்த மாதம் தொடங்கும். அப்போது எனக்கு பல சகோதரர்கள் கிடைப்பார்கள்” என அவர் பேசியுள்ளார்.
 
மேலும், இன்று காலை தனது இல்லத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். முடிவில், மதுரையில் பிப்ரவரி 24ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
பிப் 21ம் தேதி தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் தொடங்கும் கமல் 24ம் தேதி பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். இந்த அறிவிப்பின் மூலம் அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்