தலைக்கனம் பொருந்தியவர்கள் மக்கள் தீர்ப்பால் தவிடு பொடியானதே வரலாறு
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருவது தெரிந்ததே. இடையிடையே புரியாத டுவிட்டுக்களையும் பதிவு செய்து மக்களை குழப்புவதும் உண்டு
இந்த நிலையில் தமிழகத்திற்கு சத்தமின்றி துரோகம் செய்யும் மத்திய அரசுக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஒரே ஒரு டுவிட் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக தலைக்கனம் பொருந்தியவர்கள் மக்கள் தீர்ப்பால் தவிடு பொடியானதே வரலாறு என அவர் மத்திய அரசை கண்டித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:
‘ஊரடங்கை சாதகமாக்கி காவேரி மேலாண்மை தன்னாட்சியுரிமை பறிப்பு மற்றும் மின்சார சட்ட திருத்த வரைவை மாற்றிய மத்திய அரசு, மாணவர்களுக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தன்னிச்சையாக அமல்படுத்துவது, தலைக்கனம் தவிர வேறென்ன. இத்தகைய கனம் பொருந்தியவர்கள் மக்கள் தீர்ப்பால் தவிடு பொடியானதே வரலாறு’ என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது