கோவையில் பாஜகவினர் தாக்கிய செருப்புக்கடைக்கு சென்ற கமல்:
கோவையில் நேற்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரச்சாரத்துக்கு வந்து இருந்தார் என்பதும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு அவர் வாக்கு சேகரித்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்வரின் வருகையை அடுத்து பாஜகவினர் பலர் கடைகளை அடைக்க சொல்லி அராஜகம் செய்ததாக செய்திகள் வெளியானது. ஒரு சில கடைகளில் மேல் பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது
இந்த நிலையில் கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளான கடைகளில் ஒன்றான செருப்பு கடைக்கு நேற்று கமல்ஹாசன் சென்றுள்ளார். அந்த கடை உரிமையாளரிடம் அவர் கல்வீச்சு சம்பந்தமாகவும் கடை சேதமடைந்தது குறித்தும் கேட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன மேலும் அந்த செருப்பு கடையில் கமல்ஹாசன் தனக்கு ஒரு செருப்பையும் வாங்கிக்கொண்டார் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது