Webdunia - Bharat's app for daily news and videos

Install App

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு? கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (20:10 IST)
தமிழகத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று காலை வெளியானது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பில் முதல் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார். அதுமட்டுமன்றி கௌசல்யாவின் தாயார் மீதான மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கௌசல்யாவின் தந்தை, தாய் ஆகிய இருவருமே இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடப்பட்டது. அதுமட்டுமின்றி தூக்கு தண்டனை பெற்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் நெட்டிசன்களை பரவலாக பரவி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தீர்ப்பு குறித்து கூறியிருப்பதாவதுள்
 
ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments