Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்: கமல்ஹாசன் ஆவேசம்

Advertiesment
நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்: கமல்ஹாசன் ஆவேசம்
, வெள்ளி, 30 அக்டோபர் 2020 (18:51 IST)
இன்று காலை நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதியில் உள்ள கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்து உள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது
 
நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது. மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது. சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம்
 
உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும்... 
நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர… க்க தருணம் இதுவே.
 
கமல்ஹாசனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

87 ரூபாய்க்கு ஒரு வீடு… ஆனாலும் யாரும் வாங்க விரும்பவில்லை – இப்படி ஒரு அதிசயமா?