Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம்: சர்வே ரிசல்ட் சரியாக இருக்குமா?

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம்: சர்வே ரிசல்ட் சரியாக இருக்குமா?
, புதன், 20 செப்டம்பர் 2017 (06:02 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்து தீவிர விமர்சனம் முன்வைத்து வரும் நிலையில் அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி களமிறங்குவார் என்று கருதப்படுகிறது



 
 
இந்த நிலையில் வார இதழ் ஒன்று கமல்ஹாசனின் அரசியல் குறித்து எடுத்த சர்வேயில் கமல்ஹாசனுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கின்றது தமிழகம் என்று அந்த சர்வே மூலம் தெரிகிறது.
 
ஆனால் சர்வே வேறு நடைமுறை யதார்த்தம் வேறு. ஆன்லைன் சர்வேயில் ஓட்டு போடுபவர்கள், சமூக வலைத்தளத்தில் ஆதரவு கொடுப்பவர்களில் பாதிபேர் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு செல்ல மாட்டார்கள். இவர்களது வீரம் சமூக வலைத்தளங்களில் மட்டுமே. 
 
எனவே கமல்ஹாசன் முதலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனக்கான ஆதரவை உறுதி செய்து கொண்டு அரசியலில் காலடி எடுத்து வைப்பது நல்லது. இன்னொரு சிவாஜிகணேசனாகவோ அல்லது இன்னொரு விஜயகாந்த் போலவோ கமல் ஆகிவிடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு எதிரொலி: எழும்பூரில் மீண்டும் ஆதித்தனார் சிலை