Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத்திறனாளியை வேட்பாளராக நிறுத்துவோம்: கமல்ஹாசன்

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (20:09 IST)
மாற்றுத்திறனாளிகளையும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அறிவிக்கும் என்று கமல் அறிவிப்பு செய்துள்ளார்
 
வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வேட்பாளருக்கு ஒதுக்கப்படுவது போல் மாற்றுத்திறனாளியையும் வேட்பாளராக அறிவிப்போம் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார் 
 
மக்கள் நீதி மையம் சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. முதல்கட்டமாக மதுரை  மற்றும் தென் மாவட்டங்களிலும், இரண்டாவது கட்டமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் அவர் பிரச்சாரம் செய்தார் 
 
இந்த நிலையில் இன்று முதல் அவர் திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். இன்றைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாற்றுத்திறனாளி ஒருவரை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று கமல் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதே எங்களது தொலைநோக்குத் திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள் என்றும் அந்த மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியது மக்களின் கையில்தான் உள்ளது என்றும் அவர் கூறினார். கமல் ஹாசன் செல்லுமிடமெல்லாம் கூட்டம் அதிகமாக ஓடி வருவதால் அவருக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலை விட அதிக வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments