சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
மேலும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
மேலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் இல்லை என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்