தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பது தெரிந்ததே
திமுக, அதிமுக கட்சிகள் எல்லாம் இன்னும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடிக்காத நிலையிலும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. ஆனால் அதற்கு முன்னரே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி மக்களை நேரில் சந்தித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அதிக அளவில் கூடுகின்றார்கள் என்பதும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் கூட்டம் அதிகம் உள்ளது என்றும் அவரது பேச்சை கேட்க மிகுந்த ஆர்வத்துடன் பொது மக்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனது பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் குறித்தும் தான் சொல்லும் கருத்துக்கள் மக்களைச் சென்றடைவது குறித்தும் அவர் தனது டுவிட்டரில் இன்று காலை ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: கூடிக் கலையும் கும்பல் அல்ல. கூட்டி வரப்பட்ட கூட்டமும் அல்ல. இது சரித்திரம் படைக்கத் துணிந்தவர்களின் சங்கமம். நாமே தீர்வு எனும் முழக்கம் எம் சங்கநாதம். புதியதோர் புதுவை செய்வோம்!
கமலஹாசன் செல்லுமிடமெல்லாம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அதிமுக திமுக உள்பட திராவிட கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது