மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்கள் பயணம் என்ற பெயரில் முக்கிய பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவர் இன்று பொள்ளாட்சியில் மக்கள் மத்தியில் பேசுவதாக இருந்தது.
ஆனால் காவல்துறை கமல்ஹாசனுக்கு முதலில் அனுமதி தரவில்லை என்றும் அதன்பின்னர் பத்து நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து பேசிய கமல்ஹாசன், 'எனக்கு இங்கு பேச பத்து நிமிடங்கள் மட்டுமே அனுமதி கொடுத்துள்ளார்கள். ஆனால் புரட்சிக்கு மூன்று நிமிடங்கள் போதும். எனக்கு இடைஞ்சல் கொடுத்தவர்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும் நம் கவனக்குறைவால் அரசியலில் நிறைய குப்பை சேர்ந்துவிட்டது; அதை சுத்தம் செய்யும் கடமை உள்ளது. நல்ல தமிழகத்தை உருவாக்க சிறு துளிகளாக இருக்கும் நாம் பெரும் வெள்ளமாக மாற வேண்டும்; மாணவர்களின் வாழ்வு நல் வழியிலும், தீய வழியிலும் செல்வதை முடிவு செய்வது அரசியலே