Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.டி.ஏ பட்ஜெட் வெளியாகிவிட்டது: விரைவில் இந்தியா பட்ஜெட்: கமல்ஹாசன் கிண்டல்..!

Siva
செவ்வாய், 23 ஜூலை 2024 (21:37 IST)
இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டுக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது என்பதும் குறிப்பாக தமிழகத்திற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் பீகார் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்துள்ள மத்திய பட்ஜெட் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு கிள்ளி கூட கொடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ’இன்று வெளியானது என்டிஏ பட்ஜெட் என்றும் இந்தியா பட்ஜெட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பல பாசிட்டிவ் கமர்சியல் வெளியாகி இருக்கும் நிலையில் சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் வெளியாகி உள்ளன. இந்தியா பட்ஜெட் எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது, ஆனால் I.N.D.I.A பட்ஜெட் எப்போதும் வெளியாகாது அவர்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு கூட கிடைக்காது என்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா; தி.மு.க., பேட்டை ரவுடியா? அண்ணாமலை

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments