முதல் பேட்டியிலேயே பொய் கூறினாரா கமல்?

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (12:55 IST)
கமல்ஹாசன் இன்று அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நிலையில் ராமேஸ்வரத்தில் மீனவர்களின் சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அப்துல்கலாம் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத நீங்கள் அவருடைய நினைவிடத்தில் இருந்து ஏன் அரசியல் பயணத்தை தொடங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை. அது என்னுடைய நம்பிக்கை” என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த பதில் அப்பட்டமான பொய் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்
 
இயக்குநர் ஆர்.சி. சக்தி , ஆச்சி மனோரமா , நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகர் நாகேஷ் ஆகியோர்கள் மறைந்தபோது அவர்களது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய கமல், அவ்ர்களுடைய இறுதி ஊர்வலத்தில் மயானம் வரை சென்றார். உண்மை இப்படியிருக்க கமல் இவ்வாறு கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசியலில் நுழைந்த பின் கொடுத்த முதல் பேட்டியிலேயே கமல் ஒரு அரசியல்வாதி என்று நிரூபித்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

தவெகவின் சின்னம் எனக்கு தெரியும்.. ஆனால் வெளியே செல்லக்கூடாது.. செங்கோட்டையன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இன்று கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!

உலகின் இன்னொரு போர்.. தாய்லாந்து கம்போடியா நாடுகளில் தாக்குதல்..!

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments