Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியல் கருத்துக்கணிப்பு: ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிய கமல்ஹாசன்

Advertiesment
அரசியல் கருத்துக்கணிப்பு:  ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிய கமல்ஹாசன்
, சனி, 27 அக்டோபர் 2018 (13:26 IST)
தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது பற்றி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் கமல்ஹாசன்.
 
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அடுத்து யார் முதல்வராக பதவியேற்பார் என இந்தியா டுடோ, ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் பி.எஸ்.இ ஆகியவை இணைந்து 30 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 14, 820 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. 
 
அதன்படி
 
திமுக - ஸ்டாலின் - 41 சதவீதம்
அ.தி.மு.க. -பழனிசாமி - 10 சதவீதம்
மக்கள் நீதி மய்யம் -கமல்ஹாசன் - 8 சதவீதம்
பா.ம.க. - அன்புமணி -  7 சதவீதம்
ரஜினி மக்கள் மன்றம் - ரஜினிகாந்த் - 6 சதவீதம்
அதிமுக - பன்னீர்செல்வம் - 6 சதவீதம்
அ.ம.மு.க. - தினகரன் - 6 சதவீதம்
தே.மு.தி.க. - விஜயகாந்த் - 5 சதவீதம்
 
என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. 
 
அரசியல் பயணத்தை ரஜினி முதலில் தொடங்கியிருந்தாலும் பின்னர் களமிறங்கிய கமல், அடுத்தடுத்த கட்சிப்பணிகளை மேற்கொண்டு களத்தில் மக்களை சந்தித்து வருகிறார். அவருக்கு மக்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிகிறது. அதையே இந்த கருத்துக் கணிப்பும் சொல்லி இருக்கிறது.
webdunia


ஆனால் ரஜினி தொடர்ந்து படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். நேரம் காலம் பார்த்து நல்ல முடிவை சொல்கிறேன் என பல காலமாக சொல்லி வருகிறார்(சமீபத்தில் கூட தெரிவித்தார்). இன்னும் களத்திலும் இறங்கவில்லை, மக்களையும் சந்திக்கவில்லை. ஆகவே மக்களிடையே ரஜினிக்கு மவுசு குறைந்துவிட்டது. இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அப்செட்டில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்? அரசு கொறடா பரிந்துரை