Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் ம.நீ.மய்யம் இடைத்தேர்தலில் போட்டி

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (13:24 IST)
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகளின் தலைமை வேட்ளார்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றன. வரும் ஏப்ரம் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் பொழுதே தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற  தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டன. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதற்கான வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில் வரும் இடைதேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கல் பெறலாம் என்று மற்றும் விருப்ப மனுவை பொள்ளாச்சி தலைமை  அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவையில் நடைபெறவுள்ள பிரச்சாரத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவார் என்று தெரிகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments