நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எது? இந்த இரண்டில் ஒன்றா?

Mahendran
செவ்வாய், 23 ஜனவரி 2024 (13:03 IST)
நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி குறித்து ஆலோசனை நடந்து வரும் நிலையில் கோவை அல்லது தென் சென்னையில் கமல் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் எங்கு போட்டி என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது
 
 திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் இருந்து ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
அந்த ஒரு தொகுதியில் கமல்ஹாசன் போட்டி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments